உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கரூர், கரூர் அருகே உள்ள சாலைகள், பல மாதங்களாக குண் டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருகாம்புலியூர் பகுதியில், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் சரிவர செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்மட்ட பாலத்தின் சர்வீஸ் சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், கரூரில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர், சாலையில் உள்ள குழிகளில், தவறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ் சாலையில், உயர் மட்ட பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலை பகுதிகளில் உள்ள, குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க, நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை