மேலும் செய்திகள்
மாயனுார் சாலை சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
16-Jun-2025
கரூர், கரூர் அருகே, சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூர் அருகே, மேலமாயனுார் சாலையில் கோவில்கள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். மாயனுாரில் கட்டப்பட்டுள்ள கதவணைக்கு, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மேல மாயனுார் சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால், மேல மாயனுார் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
16-Jun-2025