உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலராஜபுரம் மக்களுக்கு உப்பு நீர் வினியோகம்

பாலராஜபுரம் மக்களுக்கு உப்பு நீர் வினியோகம்

கிருஷ்ணராயபுரம், பாலராஜபுரம் பஞ்சாயத்து வார்டுகளில், நல்ல குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாலராஜபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீரராக்கியம், உள்வீரராக்கியம் ஆகிய பகுதி மக்களுக்கு, பஞ்., சார்பில் காவிரி குடிநீர் வினியோகம் நடக்கிறது. கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு குழாய் வழியாக போர்வேல் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. போர்வேல் தண்ணீர் உப்பு தண்ணீராக இருப்பதால் மக்கள் சிரமத்துடன் குடிக்கும் நிலை உள்ளது. எனவே, நல்ல குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !