உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குரூப்-4 தேர்வுக்கு மாதிரி தேர்வு

குரூப்-4 தேர்வுக்கு மாதிரி தேர்வு

கரூர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்தப்படும் என, கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப்-4 தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கு தேவையான முக்கிய பாடங்கள் மற்றும் பகுதிகளை அடையாளம் காணும் திறனை மேம்படுத்துதல், தேர்வுக்கு ஏற்ப சமீபகால நிகழ்வுகளை கண்டறிந்து படிக்க வைத்தல் என, ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமை காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை கலந்துரையாடல் மற்றும் மாதிரி தேர்வு நடத்தப்படும்.இந்த கலந்துரையாடல், கரூர் மாவட்ட மைய நுாலகம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், புஞ்சை புகழூர் ஆகிய கிளை நுாலகங்களில் நடைபெறும். அதில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், அருகில் உள்ள நுாலகங்களில் வரும், 18க்குள்(நாளை) பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.மேலும், விபரங்களுக்கு கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள, மாவட்ட மைய நுாலகத்தில் நேரிடையாகவோ அல்லது, 04324-263550 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !