மேலும் செய்திகள்
விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
17-Apr-2025
கரூர் நொய்யல் அருகே, முத்தனுார் வருண கணபதி கோவிலில், வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.அதில், விநாயகர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், சேமங்கி, நொய்யல், அத்திப்பாளையம், புன்னம், உப்புபாளையம், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்செய்புகழூர், திருகாடுதுறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள, விநாயகர் கோவில்களிலும், வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியை யொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
17-Apr-2025