மனைவி மீது சரமாரி தாக்குதல் பள்ளி தலைமையாசிரியர் கைது
கரூர், கரூர் அருகே, ஆசிரியை மனைவியை அடித்து உதைத்த, பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 44. என்.புதுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர். இவருக்கும், எம்.ஆலம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியை துர்காதேவி, 40, என்பவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.தற்போது, குடும்ப பிரச்னை காரணமாக துர்காதேவி, கணவர் சுப்பிரமணியை விட்டு பிரிந்து, கரூர் ரெட்டிப்பாளையத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த, 12ம் தேதி இரவு சுப்பிரமணி, துர்காதேவி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை, அடித்து உதைத்து தகராறு செய்துள்ளார். இதுகுறித்து, துர்காதேவி கொடுத்த புகார்படி, சுப்பிரமணியை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.