உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

வாய்க்காலில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

கரூர், கரூர் அருகே, பாசன வாய்க்காலில் தவறி விழுந்த பள்ளி மாணவன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.கரூர் மாவட்டம், குப்புச்சிப்பாளையம் கீரையூர் பகுதியை சேர்ந்த கரநாதன் என்பவரது மகன் முத்தரசன், 8. கருப்பம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த, 24ல் வீட்டுக்கு அருகில் உள்ள, முதலியார் பாசன வாய்க்கால் அருகே, முத்தரசன் சிறுநீர் கழிக்க சென்றுள்ளான். அப்போது, எதிர்பாராதவிதமாக பாசன வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ