உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆசிரியர்களுக்கு சாரண இயக்க பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கு சாரண இயக்க பயிற்சி முகாம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., வை.புதுார் தனியார் பன்னாட்டு பள்ளியில், குளித்தலை சாரண மாவட்டம் சார்பில் கடந்த, 18 முதல் 24 வரை ஆசிரியர்களுக்கு சாரணர், சாரணியர், குருளையர், நீலப்பறவையர் ஆகிய நான்கு பிரிவுகளில் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், மாவட்ட நீலப்பறவையர் ஆணையர் தனியார் பள்ளி முதல்வர் பவ்யா, மாவட்ட சாரணர் ஆணையர் புருசோத்தமன் ஆகியோர் முன்னிலையில் தொடக்கவிழா நடைபெற்றது.சாரணர் அடிப்படை பயிற்சி முகாம் தலைவர் சண்முக சுந்தரம், சாரணியர் அடிப்படை பயிற்சி முகாம் தலைவர் வசந்தி, குருளையர் அடிப்படை பயிற்சி முகாம் தலைவர் கற்பகம், நீலப்பறவையர் அடிப்படை பயிற்சி முகாம் தலைவர் வின்சலீனா ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில் சாரண இயக்க வரலாறு, இறைவணக்கம் மற்றும் கொடி பாடல், குறிக்கோள், உறுதி மொழி, சாரண சட்டம், கைகுலுக்கல், மதிப்பீடு, முதலுதவி உட்பட ஒவ்வொரு பிரிவிற்கேற்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. பாரத சாரண சாரணிய இயக்கத்தின், 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 75 என்ற வடிவத்தில் நின்று சாதனை படைத்தனர். நிறைவு விழாவில் மாவட்ட துணைத்தலைவர் தனி யார் பள்ளியின் கல்விக்குழுமத் தின் தாளாளர் ரம்யா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மணப்பாறை சாரண மாவட்ட செயலாளர் சார்லஸ் ராஜ் மற்றும் மில்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில், 72 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை