உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில் தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. காத்திருப்பு போராட்டத்தில், 25க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி