உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி ஆற்று கரையோரங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை

காவிரி ஆற்று கரையோரங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை

கரூர் ;காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும், பொதுமக்களுக்காக இன்று பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது.மேட்டூர் அணையிலிருந்து, மிக அதிக நீர் வெளியேற்றப்படும்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை, எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று (15ம் தேதி) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. தவிட்டுப்பாளையம், வாங்கல், பசுபதிபாளையம் 5 ரோடு, மாயனுார், குளித்தலை, கடம்பர் கோவில் ஆகிய இடங்களில் வருவாய், பொதுப்பணி, மின்சாரம், போலீஸ், தீயணைப்பு, சுகாதாரத்துறைகளின் சார்பில், ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இது தொடர்பாக, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இயல்பு நிலை வாழ்க்கையில் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. காவிரி ஆற்றில் மிக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !