மானிய விலையில் உரம ் கள்ளச்சந்தையில் விற்பனை
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், 4,000 ஏக்கருக்கு மேல் முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. அரவக்குறிச்சி பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கை மற்றும் விவசாய பொருட்கள், நாடு முழுவதும் விற்-பனை செய்யப்படுகிறது. முருங்கை மற்றும் விவசாயத்திற்கு முக்-கிய பலமே அதன் உரங்கள் தான். மத்திய அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில், 'பிரதான் மந்திரி பாரதிய ஜன உர்வாரக் பிர-யோஜன' என்ற பெயரில், 20க்கு 20 காம்ப்ளக்ஸ் உரங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், வேளாண் துறை மூலம் விவ-சாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும், 20க்கு 20 காம்ப்ளக்ஸ் உரங்கள், அரவக்குறிச்சி யில் உள்ள உரக்கடைகளில் கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. வேளாண்துறை அலுவல-கத்தில் கைரேகை இட்டு மானிய விலையில் மொத்தமாக கொள்-முதல் செய்யப்படும் காம்ப்ளக்ஸ் உரங்கள், விவசாயிகளுக்கு மூன்று மடங்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெளியூரிலிருந்து அரவக்குறிச்சி பகுதியில் குத்த-கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதுபோன்று கள்ளச்சந்தையில் மூன்று மடங்கு அதிக விலையில் விற்கும் மத்திய அரசின் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகளுக்கு நேரடியாக மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.