உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் சாக்கடை

மோசமான நிலையில் சாக்கடை

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில் சாக்கடை கழிவு நீர் செல்லும் வழித்தடம் உள்ளது.இதன் வழியாக, மக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் செல்கிறது. தற்போது லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு அரசு மேல்நிலைப்பள்ளி சிமென்ட் சாலை, மாரியம்மன் கோவில் சாலை, மாதா கோவில் சாலை ஆகிய இடங்களில் உள்ள, கழிவுநீர் கால்வாய் முழுவதும் துார் வாராததால் செடிகள் புதர்போல் வளர்ந்து வருகிறது. செடிகள் வளர்ச்சி காரணமாக சாக்கடை கழிவுநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடை கழிவுநீர் விரைந்து செல்லும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை