உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்

கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்

குளித்தலை: குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், ராட்சத குழாய் மூலம் குளித்தலை---மணப்பாறை நெடுஞ்சாலை வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதில், மைலாடி இரட்டை வாய்க்காலில் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தது. காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழாய் உடைப்பை சரி செய்து, வீணாகும் குடிநீரை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ