உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்பு சேலம் அருகே அதிர்ச்சி; போலீஸ் விசாரணை

கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்பு சேலம் அருகே அதிர்ச்சி; போலீஸ் விசாரணை

சேலம் : சேலம் அருகே கல்குவாரியில், இரு மூதாட்டிகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அணிந்திருந்த நகைகள் மாயமானதால், கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, துாதனுார் காட்டுவளவை சேர்ந்த, அண்ணாமலை மனைவி பெரியம்மா, 65; இ.காட்டூர் மாரிமுத்து மனைவி பாவாயி, 70; நேற்று முன்தினம் இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மகுடஞ்சாவடி போலீசில் புகாரளித்தனர். இந்நிலையில் நேற்று காலை துாதனுார் காட்டுவளவில் உள்ள கல்குவாரியில், பெண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவல்படி போலீசார் சென்றனர். ஆட்டையாம்பட்டி தீயணைப்பு துறையினர், சடலத்தை மீட்டபோது பெரியம்மா என தெரிந்தது. இதையடுத்து, 2 மணி நேரத்தில் அதே குவாரியில் பாவாயி சடலமும் மிதந்தது. அதையும் மீட்டு இரு சடலங்களையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இரு மூதாட்டிகள் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, கால் காப்பு காணாமல் போயுள்ளது. கல்குவாரி அருகே வெள்ளாளபுரத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். அவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. நகைக்காக இரு மூதாட்டிகளும் கொலை செய்யப்பட்டு, கல் குவாரியில் வீசப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை