வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தண்ணீர் பாட்டிலே சம்பவ இடத்திலேயே இல்லை என பத்து ரூபாய் MLA அப்போது பேட்டி அளித்திருந்தாரே. அப்புறம் இப்போ எப்படி.
கரூர்:கரூர், த.வெ.க., கூட்டத்தில் சிதறி கிடந்த காலணிகள், கட்சி துண்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர். கரூர் - ஈரோடு சாலை, வேலுச்சாமிபுரத்தில், செப்., 27ல் த.வெ.க., சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. அதில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில், நுாற்றுக்கணக்கான காலணிகள், த.வெ.க., கட்சி துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சாலையில் சிதறி கிடந்தன. அந்த இடம், கரூர் டவுன் போலீசார் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்திருந்தனர். இதனால், காலணிகள் அகற்றப்படாமல் இருந்தது. சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர். இதையடுத்து, வேலுச்சாமிபுரத்தில் சிதறி கிடந்த காலணிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் த.வெ.க., துண்டுகளை கரூர் மாநகராட்சி ஊழியர்கள் முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர்.
தண்ணீர் பாட்டிலே சம்பவ இடத்திலேயே இல்லை என பத்து ரூபாய் MLA அப்போது பேட்டி அளித்திருந்தாரே. அப்புறம் இப்போ எப்படி.