மேலும் செய்திகள்
பயணியர் மாளிகையில் போலீசாருடன் ஐ.ஜி., ஆலோசனை
07-Oct-2025
கரூர், கரூர் அருகே, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், நேற்று கடைகள் திறக்கப்பட்டன. மேலும், த.வெ.க., தலைவர் நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்., 27ம் தேதி இரவு த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற, பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதனால், வேலுச்சாமிபுரத்தில் பிரசார கூட்டம் நடந்த இடத்தை, கரூர் போலீசார் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், சிறப்பு புலனாய்வு அதிகாரி வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில் சிதறி கிடந்த, 450 கிலோ காலணிகள், தண்ணீர் பாட்டில்கள், கட்சி துண்டுகள் மற்றும் பல்வேறு குப்பை கழிவுகளை கரூர் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். இதையடுத்து, நேற்று காலை வேலுச்சாமிபுரம் பகுதியில், மருந்து கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல் வியாபாரம் துவங்கியது.அப்போது, கட்டட உரிமையாளர்களில் ஒருவரான சரஸ்வதி, 60, என்பவர் கூறியதாவது:த.வெ.க., கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டதால், அக்கட்சி தொண்டர்கள் இங்கிருந்த தென்னங்கீற்றை பிரித்து விட்டனர். என்னுடைய நான்கு கடைகள் முன், போடப்பட்டிருந்த ெஷட்டையும் சேதப்படுத்தி விட்டனர். அவற்றை சரி செய்ய, ஐந்து லட்ச ரூபாய் வரை செலவாகும். அதை, த.வெ.க., தலைவர் விஜய் நிவாரணமாக தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மருந்து கடை உரிமையாளர் ஆனந்தன், 50, கூறியதாவது:கடந்த செப், 27ல், த.வெ.க., கூட்டம் நடந்த நாள் முதல், கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்றுதான் (நேற்றுதான்) கடை திறக்கப்பட்டுள்ளது. என் கடை முன் இருந்த, சிசிடிவி கேமரா பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. த.வெ.க., கட்சி சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
07-Oct-2025