உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரு ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் கடைகளுக்கு சீல்

இரு ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் கடைகளுக்கு சீல்

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில், ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இரண்டு கடைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால், சீல் வைக்கப்பட்டது.குளித்தலை பஸ் ஸ்டாண்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பேரால குந்தாளம்மன் கோவிலுக்கு சொந்தமான, ஒரு ஏக்கர் 22 சென்ட் நிலத்தில் நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்தி, தற்காலிக பஸ் ஸ்டாண்டாக, 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தி வருகிறது. நகராட்சி சார்பில், இரு ஆண்-டுக்கு முன், 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.இதில் கோவில் நேரடி கட்டுப்பாட்டில் சீனிவாசன், மாணிக்கம் ஆகியோர் கடைக்கு வாடகை செலுத்தி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும், வாடகை செலுத்தாமல் இருந்து வந்-தனர். சீனிவாசன் என்பவர், ஒரு லட்சத்து, 77 ஆயிரத்து, 70 ரூபாய், மாணிக்கம், 25 ஆயிரத்து, 314 ரூபாய் செலுத்தாமல் இருந்து வந்தனர். குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தீபா மூலம், இரண்டு கடைக்காரர்களுக்கும் முழு தொகையும் செலுத்த கோரி, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருவரும் நோட் டீஸ் பெற்று கொண்டு, வாடகை பாக்கி செலுத்-தாமல் இருந்து வந்தனர்.இந்நிலையில் நேற்று மாலை, செயல் அலுவலர் தீபா தலை-மையில், பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் நந்தகுமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்-றப்பட்டது. தொடர்ந்து கடை வீதியில் இரண்டு பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !