உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / த.வெ.க., கூட்ட வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் மேலிட உத்தரவுக்காக காத்திருக்கும் எஸ்.ஐ.டி.,

த.வெ.க., கூட்ட வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் மேலிட உத்தரவுக்காக காத்திருக்கும் எஸ்.ஐ.டி.,

கரூர்: கரூர் த.வெ.க., கூட்டம் தொடர்பான வழக்கு, சி.பி.ஐ., விசார-ணைக்கு நேற்று மாற்றப்பட்டது. இதனால், போலீஸ் ஐ.ஜி., தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசார், மேலிட உத்தரவுக்காக, கரூரில் காத்திருக்கின்றனர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி இரவு நடந்த த.வெ.க., கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, மேற்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமை-யிலான போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, நேற்று உச்சநீதிமன்றம் உத்தர-விட்டது.இதனால், கரூர்-வெள்ளியணை சாலை பொதுப்பணித் துறைக்கு சொந்தமான திட்ட அலுவலகத்தில் செயல்பட்டு வரும், சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில், நேற்று விசாரணை எதுவும் நடைபெறவில்லை. கரூர் அருகே புகழூர் காகித ஆலையின், கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ள ஐ.ஜி., அஸ்ரா கார்க் நேற்று மதியம் வரை, புலனாய்வு குழு அலுவலகத்துக்கு வர-வில்லை.இதுகுறித்து, புலனாய்வு குழு போலீசார் கூறியதாவது:உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கரூர் த.வெ.க., கூட்ட வழக்கை, இனிமேல் சி.பி.ஐ., அதிகாரிகள்தான் விசாரிப்பர். உச்சநீதிமன்-றத்தின் தீர்ப்பு நகல், அரசுக்கு கிடைத்த பிறகு, எங்களுக்கு வரும் உத்தரவை பொறுத்து, செயல்பாடுகள் இருக்கும். மேலிட உத்தர-வுக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ