மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
02-Aug-2025
கிருஷ்ணராயபுரம், சிவாயம், பிடாரி அம்மன் திருவீதி உலா சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயத்தில், பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கோவில் திருவிழாவை முன்னிட்டு, பிடாரி அம்மன் கிராம எல்லையை சுற்றி வரும் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் ஒவ்வொரு கிராம எல்லை வழியாக கொண்டு செல்லப்பட்டது. இரும்பூதிப்பட்டி, சந்தையூர், கோடங்கிப்பட்டி, அய்யர்மாலை ஊர்களுக்கு பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் சிறப்பு வழிபாடு பூஜை செய்து, பிடாரி அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
02-Aug-2025