மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் வெள்ளி சிறப்பு பூஜை
21-Jun-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்., கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி பிரிவு தார்ச்-சாலை அருகில் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கான பாலம் பணி கடந்த வாரம் துவங்கப்பட்டது. இதற்காக, பொக்லைன் இயந்-திரம் கொண்டு குழிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த வழியாக செல்லும் வாகனங்கள், மாற்று வழியான சந்தைப்பேட்டை அருகே உள்ள சாலை வழியாக சென்று வருகின்றன. பாலம் பணி துவங்கி பணிகள் கிடப்பில் உள்ளதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிர-மத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
21-Jun-2025