உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருதுார், நங்கவரம் டவுன் பஞ்.,ல் புகையில்லா போகி கொண்டாட்டம்

மருதுார், நங்கவரம் டவுன் பஞ்.,ல் புகையில்லா போகி கொண்டாட்டம்

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் முதல் நிலை டவுன் பஞ்., நகர துாய்மை இயக்கம் சார்பில், புகையில்லா போகி கொண்டாடப்-பட்டது. டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானு ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் சார்பில், 15 வார்டுகளிலும் விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பழைய கழிவுகள், டயர்கள், துணிகள், பிளாஸ்டிக் பொருள்கள், எரியூட்டுவதை தவிர்த்து, சேகரிப்பு மையங்களில் ஒப்படையுங்கள். சுற்றுச்சூழல் மாசு அடைவதை தவிர்த்திடுங்கள். உங்களை நாடிவரும் வாகனத்தில் வழங்கிடுங்கள் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல், நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலை-மையில், துணைத்தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் காந்த-ரூபன் முன்னிலையில், நங்கவரம், தமிழ்ச்சோலை, குறிச்சி, கவுண்டம்பட்டி, மாடு விழுந்தான் பாறை, நச்சலார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள, 18 வார்டுகளில் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை