திடக்கழிவு மேலாண்மை உறுதிமொழி ஏற்பு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், திடக்கழிவு மேலாண்மை குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் நமது குப்பை, நமது பொறுப்பு என்ற தலைப்பில் வீடுகள் மற்றும் வணிக வளாக பகுதிகளில் இருந்து, முன்கள பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து, மறுசுழற்சி முறையை மேம்படுத்திட பேரூராட்சி தலைவர் ஜெயந்தி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.