கி.புரம் தாலுகா ஆபீசில் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், வி.சி., சார்பில் சுமுக தீர்வுக்காண பேச்சுவார்த்தை நடந்தது.கிருஷ்ணராயபுரம் தாலுகா தாசில்தார் பிரபாகர் தலைமை வகித்தார். இதில், சித்தலவாய் பஞ்சாயத்து வார்டுகளில் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மயான கூடம் ஆகியவைகளை செய்து தரக்கோரி, வி.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்த பேச்சுவார்த்தை, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதையடுத்து, முனையனுாரில் குடிநீர் வசதியை உடனடியாக செய்து தருவது, சிமென்ட் சாலை, மயான கூடம் ஆகியவற்றுக்கு நிதி பெறப்பட்டு விரைவில் செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், வி.சி., கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்ற வன்னியரசு மற்றும் துணை தாசில்தார், மாயனுார் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.