கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
கரூர், டிச. 19-கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், பெரிய வரப்பாளையத்தில் கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.டி.ஆர்.ஓ., கண்ணன் முகாமை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு விளக்க கையேட்டை வழங்கினார். அதை தொடர்ந்து ஆடு, மாடுகள், வெள்ளாடுகள் என, 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது. முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், உதவி இயக்குனர் உமாசங்கர், நோய் புலனாய்வு பிரிவு டாக்டர் லில்லி அருள்மேரி, கால்நடை மருத்துவர் கோபிநாத், சுதா, திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.