புகழிமலையில் தைப்பூச திருவிழா சிறப்பு பூஜை
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பி-ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த, 4ல் கிராம சாந்தி, 5ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 9ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தைப்பூச திருவிழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையும், மாலை, தேரோட்டமும் நடந்தது. 14ல் கொடியிறக்கம், 15 இரவு விடை மாத்தி நிகழ்ச்சியையொட்டி, சுவாமி திருவீதி உலா நடந்-தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நேற்று காலை, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையுடன், தைப்-பூச திருவிழா நிறைவடைந்தது.