துர்க்கை அம்மன் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை
கரூர், டிச. 19-நன்செய் புகழூர், அக்ரஹாரம் அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்கை தேவி கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.அதில், மூலவர் துர்க்கை தேவி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் துர்க்கை தேவி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், மார்கழி மாதத்தையொட்டி துர்க்கை தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.