உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் :ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், இந்த மாதம் முழுவதும் பெண்கள் விரதம் மேற்கொள்வர். குறிப்பாக ஆடி வெள்ளியில், மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்வர். அதன்படி, ஆடி முதல் வெள்ளியான நேற்று, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடந்தது.நாமக்கல் தட்டார தெருவில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில், பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், அம்மனுக்கு கூழ் படைத்து, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.* ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 50,000க்கும் மேற்பட்ட மாங்கல்ய கயிறால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்ய கயிறு, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை