உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி

கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது. அதில், 17 பேர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான போட்டியில், 27 பேர் கலந்து கொண்டனர். காந்தி கண்ட இந்தியா, எம்மதமும் நம்மதமே, இமயம் முதல் குமரி வரை, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, சத்திய சோதனை உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் பேசினர்.வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்பட்டது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை