உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயிர்களை நாசம் செய்து வரும் புள்ளி மான்கள்

பயிர்களை நாசம் செய்து வரும் புள்ளி மான்கள்

குளித்தலை, குளித்தலை அடுத்த, வடசேரி பெரிய ஏரியில், 100க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளன. மேய்ச்சலுக்காக இரவு நேரங்களில் வடசேரி பெரிய ஏரியில் இருந்து வெளியில் வருவதும், பின்னர் பெரிய ஏரிக்குள் செல்வதுமாக மான்கள் உள்ளன. இதேபோல், வடசேரி பெரிய ஏரியை ஒட்டி விவசாய நிலங்களும் அமைந்துள்ளன. இதில் நெல், கரும்பு, சோளம், கம்பு, நிலக்கடலை பயிர்களை சாகுபடிகளை செய்து வருகின்றனர்.ஏரிக்குள் தண்ணீர் தேங்கி இருப்பதால், மேய்ச்சலுக்கு புற்கள் கிடைக்காமல் பகலில் மான்கள் திண்டாடுகின்றன. இந்நிலையில் புள்ளிமான் கூட்டங்கள், மேய்ச்சலுக்காக அதிக துாரம் செல்லாமல், ஏரியை ஒட்டி, 1 கி.மீ., வரை சென்று இரவு நேரத்தில் மேய்ச்சலிட்டு வருகிறது. விவசாய நிலங்களில் மான்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் நஷ்டத்தை சந்திப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.பெரிய ஏரியை சுற்றி, கம்பி வேலி அமைத்து புள்ளி மான்களுக்கு ஏற்ற உணவு வகைகளை இடவேண்டும். விவசாய நிலங்களுக்கு, பாதுகாப்பு கம்பி வேலிகளை அமைக்க மானியத்துடன் கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ