கரூரில் ஸ்ரீ சீதா ராமர் கல்யாண உற்சவ விழா: பக்தர்கள் பரவசம்
கரூர்: கரூரில் உள்ள, ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 24வது ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது.கரூரில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகில் உள்ள, ஐயப்பன் கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா, பக்தி பாடல்களுடன் தொடங்கியது. நேற்று காலை, ராம் பாகவதர் தலைமையில், சீதா, ராமர் உற்சவ சிலைகளுக்கு மஹா அபி ேஷகம் மற்றும் கல்யாண உற்சவ விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ சீதா ராமர் திருவீதி உலா நடந்தது.ஜனவரியில் மாரத்தான் போட்டி: கரூர் கலெக்டர் அறிவிப்பு