உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர் :கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். வருவாய்த்துறை சார்பாக, நால்வருக்கு வகுப்பு சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்டவையும், கூட்டுறவு துறை சார்பாக, நான்கு பேருக்கு, 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, மாநகராட்சி சார்பில், மூவருக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகள் என, 11 பேருக்கு, 5.20 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மண்டலக்குழு தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ