உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பல்வேறு இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பல்வேறு இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், கரூர் மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. இதில், கரூர் மாநகராட்சியில் 29, 30 வார்டுகளுக்கு, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்திலும், கரூர் வட்டாரத்தில் நெரூர் வடக்கு பஞ்.,க்கு நெரூர் வடக்கு கஸ்பா சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், வேலம்பாடி பஞ்.,க்கு ரெங்கராஜ் நகர் நர்சரி அருகிலும், குளித்தலை வட்டாரத்தில், இரணியமங்கலம் பஞ்.,க்கு சீதா ராஜாராம் பாலிடெக்னிக் கல்லுாரியிலும் முகாம் நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை