மேலும் செய்திகள்
இன்று மருத்துவ முகாம்
25-Oct-2025
கரூர், கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டர்.பின், அவர் கூறியதாவது:இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் உள்பட, 17 மருத்துவ சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. அனைத்து பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. முகாமில், 5,906 ஆண்கள், 9,530 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் (பொ) ராஜா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Oct-2025