உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

குளித்தலை, குளித்தலையில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்.இதில் 18, 19, 20வது வார்டு பகுதிகளுக்கு நடந்த முகாமில் வருவாய் துறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகள், சமூக நலத்துறை உள்ளிட்ட, 13 துறைகள் சார்பில் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம், இடமாற்றம், ஆதார் கார்டு உள்ளிட்ட 43 சேவைகளுக்கு மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எம்.எல்.ஏ., மாணிக்கம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நகராட்சி கமிஷனர் நந்தகுமார், பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில், 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை