உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 11ம் வகுப்பு மாணவி, சகோதரிக்கு தொந்தரவு குளித்தலையில் சித்தப்பா, அண்ணன், தாய் கைது

11ம் வகுப்பு மாணவி, சகோதரிக்கு தொந்தரவு குளித்தலையில் சித்தப்பா, அண்ணன், தாய் கைது

குளித்தலை:குளித்தலை அனைத்து மகளிர் போலீசார், குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு, பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த வாரம், கூடலுார் பஞ்., பேரூர் அரசு மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அப்போது, 11ம் வகுப்பு மாணவி, தனக்கும், தன் சகோதரிக்கும் தொடர்ந்து பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறி, கண்ணீர் மல்க மகளிர் போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து, மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதன்படி, சமூக பணியாளர் கனகவள்ளி, 34, என்பவர், பாதிக்கப்பட்ட பள்ளி சிறுமி மற்றும் சகோதரியிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். இதில், மாணவியின் சித்தப்பா மற்றும் இவரது, 17 வயது மகன் ஆகிய இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக சிறுமியரின் தாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புகார்படி, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, போக்சோ சட்டத்தில், சிறுமியின் சித்தப்பா, இவரது, 17 வயது மகன், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ