மேலும் செய்திகள்
நாளை கடம்பவனேஸ்வரர்கோவிலில் தேரோட்ட விழா
10-Mar-2025
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், திரு-மண தடை போக்கும் தலமாக விளங்குகிறது. மேலும், சுற்றுவட்-டார பகுதியை சேர்ந்த கிராம மக்களின் திருமண நிகழ்ச்சிகள், இங்கு நடந்து வருகின்றன. இந்நிலையில், திருமண மண்டபம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சட்டசபையில் எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார். அவரது கோரிக்கையை ஏற்று, நேற்று காலை, 11:00 மணியளவில், ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை செயலாளர் மணிவாசகம், இணை ஆணையர் ரத்தி-னவேல் பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மற்றும் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு திருப்பணிகளை ஆய்வு செய்தார். மண்டல உதவி ஆணையர் ரமணி காந்தன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
10-Mar-2025