கூலி தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கல்
கரூர், அரவக்குறிச்சி அருகே, வேலை செய்த போது கிணற்றில் தவறி விழுந்த, கூலி தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என, தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா மற்றும் கூலி தொழிலாளிகள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஜமீன் ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 37; இவர் கடந்தாண்டு ஜூலை, 10ல் அதே பகுதியை சேர்ந்த வாங்கிலியப்பன் என்பவரது தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். பிறகு, கிணற்றில் உள்ள மின் மோட்டாரை கயிற்றால் கட்டி, மேலே கொண்டு வரும் போது, ராஜ்குமார் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். ஓராண்டு ஆகியும் ராஜ்குமார் குடும்பத்துக்கு, அரசின் நிதியுதவி வரவில்லை. எனவே, ராஜ்குமார் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.