உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு மானியம்

அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு மானியம்

கரூர் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 300 சதுர அடி இடத்தில், கொல்லைப்புறத்தில், புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் மகளிர் தேர்வு செய்யப்படவுள்ளனர். திட்டத்திற்கான செலவு, 3 லட்சம் ரூபாயில், 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதற்கு, 15 தினங்களுக்குள் திருச்சி மற்றும் கரூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 0431 2421173 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ