உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  தி.மு.க., வேட்பாளர் நிறுவனத்தில் திடீர் சோதனை

 தி.மு.க., வேட்பாளர் நிறுவனத்தில் திடீர் சோதனை

கரூர்: கரூர் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் பங்குதாரராக உள்ள ஜவுளி நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர். கரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் தியாகராஜன், 65, போட்டியிடுகிறார். இவர், பங்குதாரராக உள்ள, 'ஆசீ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம்' கரூர் - ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவில் செயல்படுகிறது. அதில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, மூன்று கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தில் இருந்து, தியாகராஜனின், தேர்தல் செலவுக்கு பணம் செல்வதாக, வருமான வரித்துறையினருக்கு புகார் சென்றது. அதனடிப்படையில் சோதனை நடப்பதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை