உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவுநீரால் அவதி

பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவுநீரால் அவதி

கரூர் : கரூரில் நேற்று, பாதாள சாக்கடை மூடி உடைந்து, கழிவுநீர் சாலையில் ஓடியது. இதனால், துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்கள், பாதாள சாக்கடை திட்ட ராட்சத குழாய்களில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்யும் விதத்தில், வட்ட வடிவில் மேல் பகுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது.அதன் மேல், சிமென்ட் மூடி வைக்கப்பட்டுள்ளது. மூடிகள் மீது பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால், கரூர் நகரின் பல இடங்களில் உடைந்துள்ளது. அதை, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்வது இல்லை. இந்நிலையில், நேற்று காலை பாதாள சாக்கடை மூடி உடைந்து, கழிவு நீர் சாலையில் சென்றது. இதனால் துர்நாற்றம் வீசியது. மேலும் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர்.கரூர் நகரின் பல பகுதிகளில், பாதாள சாக்கடை மூடி உடைந்த நிலையில் உள்ளது. அதை சரி செய்யாமல், மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். இதனால், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் கவன குறைவால் பாதாள சாக்கடை மூடி மீது சென்று, கீழே விழ வாய்ப்புள்ளது. பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், உடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்றவும், கழிவுநீர் வெளியேறும் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்யவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ