உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்வாய் கழிவுநீர் தேக்கம் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு

கால்வாய் கழிவுநீர் தேக்கம் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு

கால்வாய் கழிவுநீர் தேக்கம்சுகாதார சீர்கேட்டால் தவிப்புகரூர், செப். 20-கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, தான்தோன்றிமலை வடக்கு தெரு, வெங்கடேஷ்வரா நகர், இலங்கை தமிழர் முகாம், சவுரிமுடித்தெரு உள்பட பல்வேறு தெருக்களில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, சாக்கடை வடிகால்கள் பெரும்பாலும் தரையோடு தரையாக தாழ்வாக உள்ளது. கழிவு நீர் அனைத்தும் முறையாக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. குடியிருப்புக்கு முன்புறம் கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது. சாக்கடை வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !