உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோடை விடுமுறை நிறைவு: பள்ளிகளில் துாய்மை பணி

கோடை விடுமுறை நிறைவு: பள்ளிகளில் துாய்மை பணி

கரூர்: கோடை விடுமுறை நிறைவு பெறும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அரசு பள்ளிகளில் துாய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, விலையில்லாத புத்தகங்கள் அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், பள்ளிகள் திறக்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளில், துாய்மை பணிகள் தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை