முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி: மக்கள் அவதி
கரூர்:கரூர் அருகே, முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், மாயனுார் பஞ்., ரயில்வே ஸ்டேஷன் அருகே, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வசதிக்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது.இந்நிலையில், மழை காரணமாக, சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி, முட்புதர்கள் முளைத்துள்ளன. போர்வெல் குழாய்களும் சேதமடைந்துள்ளதால், நிலத்தடி நீரையும் பொது மக்கள் பயன்படுத்த, முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, மாயனுார் கிராம பஞ்., நிர்வாகம், சேதமடைந்த போர்வெல் குழாய்களை உடனடியாக சரி செய்து, சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி முளைத்துள்ள, முட்புதர்களை அகற்ற வேண்டியது அவசியம்.