உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் போராட்டம்

கரூர், டிச. 20-கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள், தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். பணிச்சுமையால் பாதிக்கப்படும் கள பணியாளர்-களின், அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு, ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடு-களை வரையறுக்க வேண்டும். உதவி இயக்குனர், கூடுதல் இயக்குனருக்கு உள்ள பணிகளை, மண்டல இணை இயக்குனர், இணை இயக்குனருக்கு மாற்றுவதை நிறுத்தி, பழைய நடைமுறை தொடர வேண்டும்.சிறப்பு திட்-டங்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு கால நிர்ணயம் வழங்-காமல், ஊழியர்கள் மீது பணி சுமையை சுமத்துவ-தாலும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். தற்செயல் விடுப்பில், 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட துணைத் தலைவர் மோகன்ராஜ், இணை செயலாளர் குணசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை