டாஸ்மாக் மதுபான ஊழியருக்கு கத்திக்குத்து: 4 பேர் மீது வழக்கு
கரூர், கரூரில், டாஸ்மாக் பார் ஊழியரை கத்தியால் குத்திய, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 30; இவர், கரூர் உழவர் சந்தை அருகே உள்ள, டாஸ்மாக் மதுபான கடை பாரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு மேல் கரூர் ராயனுாரை சேர்ந்த புக்கரான்டி, 29; நடேஷ், 29; திருமாநிலையூரை சேர்ந்த ரஞ்சித், 30; நிவேஷ், 28; ஆகியோர் சென்று, பிரகாஷிடம் மதுபாட்டில்களை கேட்டுள்ளனர்.பிரகாஷ் மதுபாட்டில்களை தர மறுத்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த ரஞ்சித், பிரகாஷின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். மற்றவர்கள் பிரகா ைஷ அடித்துள்ளனர். அதில், காயம் அடைந்த பிரகாஷ் கொடுத்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார் ரஞ்சித் உள்பட, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.