உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலிபர் கொலை: கொலையாளியை போலீஸ் தேடல்

வாலிபர் கொலை: கொலையாளியை போலீஸ் தேடல்

கரூர்: கரூர் அருகே, வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தப்பி ஓடிய பெயின்டரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நஞ்சக்காளக்குறிச்சி பகு-தியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கபில்தேவ், 23. பி.ஏ., வரை படித்துள்ளார். ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது குடும்பத்துக்கும், கரூர் ராயனுார் பகுதியை சேர்ந்த பெயின்டர் வீரமலை, 32, என்பவருக்கும் இடையே, ஏற்-கனவே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் கரூர் அருகே திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் கபில்தேவுக்கும், வீரமலைக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, ஆத்திரமடைந்த வீரமலை மறைத்து வைத்திருந்த கத்-தியால், கபில்தேவை வயிற்று பகுதியில் குத்தி விட்டு தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், கபில்தேவை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சையின் போது கபில்தேவ் உயிரிழந்தார். இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்-குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வீரமலையை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !