ரயில் முன் பாய்ந்து வாலிபர் விபரீத முடிவு
குளித்தலை, குளித்தலை, உழவர் சந்தை புறவழிச்சாலை அருகில் உள்ள, கரூர்-திருச்சி மார்க்க ரயில் பாதையில நேற்று காலை, 10:30 மணியளவில் கோவையில் இருந்து, மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் முன்புறம், தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதில் தலை, உடல், கால், கை ஆகிய பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.இறந்தவர் உடலை கைப்பற்றிய கரூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு, 30 முதல், 35 வயது இருக்கும். கரூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.