விபத்தில் வாலிபர் பலி
கரூர், கிருஷ்ணராயபுரம் குப்பாச்சிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 40, திருமணமானவர். இவர் நேற்று முன்தினம், ேஹாண்டா சைன் டூவீலரில், கரூர்-திருச்சி சாலை திருமாநிலையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென டூவீலர் நிலை தடுமாறி எதிரே இருந்த, தடுப்பு சுவர் மீது மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த செல்வம், அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, செல்வத்தின் மனைவி முத்து லட்சுமி, 38, கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.