உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில் பூசாரிகள் நல சங்க பொறுப்பாளர்கள் கூட்டம்

கோவில் பூசாரிகள் நல சங்க பொறுப்பாளர்கள் கூட்டம்

கரூர் :கரூர் அருகில் மண்மங்கலத்தில், கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.பூசாரிகள் சங்க மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். வரும், 14ல் கோவை மாவட்டம் சூலுாரில் நடத்தப்படும் தமிழக கோவில் பூசாரிகள் நல சங்க மாநாட்டில், கரூர் மாவட்டத்திலிருந்து அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின், நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை