உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட வளர்ச்சியில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்

கரூர் மாவட்ட வளர்ச்சியில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்

கரூர், கரூர் மாவட்ட வளர்ச்சியில், தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்துக்கு தமிழக அரசு, 13க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்தது. ஆனால், ஒன்று கூட முழுமை அடையவில்லை. குறிப்பாக, வேளாண்மை கல்லுாரிக்கு புதிய கட்டுமானம் இல்லை. டைடல் பார்க், ஜவுளி பூங்கா, பஸ் ஸ்டாண்ட், லாலாப்பேட்டை, மருதுாரில் கதவணை, மாயனுாரில் ரயில்வே மேம்பாலம், சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனை, கிழக்கு ஸ்டேஷனாக மாற்றுதல், கரூரில் விமான நிலையம் உள்ளிட்ட பணிகள் தொடரவில்லை.மேலும், கரூருக்கு பெருமை சேர்க்கும் ஜவுளி தொழில், பஸ் பாடி கட்டும் தொழில் மற்றும் கொசுவலை தொழில்களை, மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தாமல் இருப்பதும் அடங்கும். எனவே, தமிழக அரசு கரூர் மாவட்டத்தின் மீது, தனி கவனம் செலுத்தி வளர்ச்சி பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை